முயற்சி நிறைவேற...
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
முயற்சி இனிதே நிறைவேற ஆசையா... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெத்தவநல்லுார் ஆதிவழிவிடும் விநாயகருக்கு பால் அபிேஷகம் செய்யுங்கள். இக்கோயில் பாழடைந்து கிடந்த போது பக்தர் ஒருவர் திருப்பணி நடக்க அருள்புரிய விநாயகரிடம் வேண்டினார். 'திருப்பணி சிறப்பாக நடக்கும்' என அசரீரி ஒலித்தது. அதன்படியே திருப்பணி முடிந்து கும்பாபிேஷகம் நடந்தது. தினமும் கணபதி ேஹாமம் இக்கோயிலில் நடக்கிறது. பால் அபிேஷகம் செய்தால் நினைத்தது நிறைவேறும். சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாத்தினால் பிரச்னை தீரும். எப்படி செல்வது: ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி தொடர்புக்கு: 93608 64490