உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட்டம்மா என்பால்நோக்காய் ஆகிலுமுன் பற்றல்லால் பற்றிலேன்தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே.மீன்கள் உலவும் வயல்கள் சூழ்ந்த திருவித்துவக்கோட்டில் (கேரளா) உள்ள பெருமானே. என் மீது உன் கடைக்கண் பார்வை விழவில்லை. ஆனாலும் வேறு ஒருவரைப் பற்றி நினைக்கமாட்டேன். அதாவது ஒரு நாட்டின் மன்னன் தன் குடிமக்களை காக்காமல் இருந்தாலும் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா. 'தன்னை ஆளும் மன்னனின் செங்கோல் தங்களுக்கு அருள் செய்யும்' என்று நம்பிக்கையுடன் வாழ்வர். அவர்களைப் போலவே நானும் உன் அருளை நோக்கி வாழ்கிறேன் என ஏங்குகிறார் குலசேகராழ்வார்.