உள்ளூர் செய்திகள்

குழப்பம் தீர...

சப்த கன்னியர்களில் பிரதான இடம் பெற்றவள் வராகியம்மன். பன்றி முகம் கொண்ட இந்த அம்மனை போருக்கு செல்லும் முன் மன்னர்கள் வெற்றிக்காக வழிபடுவர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள வராகி சன்னதி புகழ் மிக்கது. காலில் சிலம்பும், கையில் கலப்பை, உலக்கையும் ஏந்தியிருக்கும் இவளை பஞ்சமியன்று வழிபட்டால் விரும்பிய வரம் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் இங்கு விளக்கேற்றுகின்றனர். மனநோய், குழப்பம், சந்தேகம் தீர தயிர்ச்சாதம் நைவேத்யம் செய்கின்றனர்.