உள்ளூர் செய்திகள்

அஷ்டலட்சுமி கோயில்

அஷ்டலட்சுமிகளை ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்ப வேண்டும் என காஞ்சி மஹாபெரியவர் விரும்பினார். அதற்குரிய இடத்தை தேர்வு செய்து கோயில் கட்டப்பட்டது. தேவர்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது மகாலட்சுமி அதில் வெளிப்பட்டாள். வங்கக்கடலை பாற்கடலாக கருதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கோயில் உருவானது. சமுத்திர புஷ்கரிணி எனப்படும் வங்கக்ககடலே இங்கு தீர்த்தமாக உள்ளது.