உள்ளூர் செய்திகள்

கூத்தனுார் சரஸ்வதி

சரஸ்வதியின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார் தமிழ் புலவரான ஒட்டக்கூத்தர். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனுாரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியை (சரஸ்வதி) வழிபட்டு தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கொடுத்தாள். இதனால் பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய தலம் என்பதால் கூத்தனுார் என பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை 'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே' என பாடியிருப்பது இவரின் பக்தியை வெளிப்படுத்தும். 'கிழத்தி' என்பதற்கு 'தலைவி' என்பது பொருள். சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இப்பெயரிட்டு ஒட்டக்கூத்தர் அழைத்தார்.