துவார பாலகர்
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
சிவன் கோயிலில் கருவறைக்கு நுழையும் முன் துவார பாலகர் இருவர் நிற்பதை தரிசிக்கலாம். ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்பது இவர்களின் பெயர். ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியபடி சிவன் ஒருவரே முழுமுதல் கடவுள் என உணர்த்துகிறார் ஆட்கொண்டார். கையை விரித்துக் காட்டியபடி சிவனைத் தவிர வேறு யாரையும் சரணடைய வேண்டாம் என சொல்கிறார் உய்யக்கொண்டார். இந்த உண்மையை நமக்கு உணர்த்துவதே இவர்களின் பணி.