குணபூரணி
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
கோயம்புத்துார் மாவட்டம் உப்பிலிபாளையத்தில் உள்ளது தண்டுமாரியம்மன் கோயில். இந்த அம்மன் குணபூரணி எனப்படுகிறாள். முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த படை வீரர்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டது. அவர்கள் இங்குள்ள அம்மனுக்கு தண்டுக்கீரை சாறு அபிேஷகம் செய்து தீர்த்தமாக பருகினர். நோய் குணமாகவே அம்மனை குணபூரணி என அன்புடன் அழைத்தனர். இந்த அம்மனுக்கு பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அங்க பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செய்ய விருப்பம் நிறைவேறும்.