நவக்கிரக விநாயகர்
UPDATED : நவ 14, 2024 | ADDED : நவ 14, 2024
சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச்சாலையில் திருமலைவையாவூர், வேடந்தாங்கல் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோயில் உள்ளது.இங்கு 8 அடி உயரத்தில் நவக்கிரக விநாயகர் காட்சி தருகிறார். இவரின் நெற்றியில் சூரியன், தலையில் குரு, வயிற்றில் சந்திரன், வலது மேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புதன், இடது மேற் கரத்தில் ராகு, கீழ் கரத்தில் சுக்கிரன், வலது காலில் செவ்வாய், இடது காலில் கேது உள்ளனர். இவரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும். நவக்கிரக விநாயகருக்குப் பின்புறம் யோக நரசிம்மர் இருக்கிறார்.