உள்ளூர் செய்திகள்

பணம் சேர...

அரக்கன் கம்ஹாசுரனால் துன்பப்பட்ட தேவர்கள் உதவி வேண்டி பராசக்தியை சரணடைந்தனர். கருணையே உருவான அவள் திரிபுர பைரவியாக உருவெடுத்தாள். இதை அறிந்த அரக்கன் சிவனை நோக்கி தவம் செய்தான். ஆனால் அவன் வரம் கேட்க முடியாதபடி ஊமையாக்கினாள் பராசக்தி. மூர்க்க குணம் கொண்டவனாக அலைந்ததால் அவனை 'மூகாசுரன்' என அழைத்தனர். அவனை கொல்லுார் என்னும் இடத்தில் பராசக்தி வதம் செய்து 'மூகாம்பிகை' என்னும் பெயரில் குடி கொண்டாள். நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தியபடி இங்கு இருக்கிறாள். சவுந்தர்ய லஹரி என்னும் பாடலை ஆதிசங்கரர் இங்கு தான் பாடினார். இதற்கு 'அழகுக்கலை' என பொருள். இதைப் பாடினால் பணம், தங்கம் சேரும்.