உள்ளூர் செய்திகள்

பாவம் தீர...

முன்னோர்கள் ஏன் விரதம் இருக்க சொன்னார்கள் தெரியுமா... அதற்கு இரண்டு காரணம் உண்டு. முதல் காரணம் வயிற்றுக்கு ஓய்வு கொடுப்பது. இதன் மூலம் ஜீரண உறுப்புகள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும், அளவுக்கு மீறி சாப்பிட்டால் அதுவே நோயாக மாறுகிறது. அதனாலேயே நோயுற்ற போது உணவு கட்டுப்பாட்டை விதிக்கிறார்கள்.இரண்டாவது உபவாசம் என்றால் 'பட்டினியாக இருப்பது' என்பது மட்டுமல்ல. 'கூட வசிப்பது' என்றும் பொருள் உண்டு. கடவுளுடன் வசிப்பது. அதாவது அவருடன் ஒட்டிக் கொண்டு அவருடைய நல்ல குணங்களை பற்றி சிந்திப்பதே உபவாசம். விரத நாளில் பக்திக்கதை கேட்பது, சுவாமியின் திருநாமங்களைச் சொல்வது, பாசுரம் பாடுவது என மனம் பக்தியில் ஈடுபட வேண்டும். இதனால் பாவங்கள் தீரும்.