சாரங்கபாணி
UPDATED : ஜன 13, 2025 | ADDED : ஜன 13, 2025
கோயில்களுக்குப் புகழ் பெற்ற நகரம் கும்பகோணம். இந்த ஊரின் நடுவில் பிரமாண்டமான கோயிலில் இருக்கிறார் சாரங்கபாணி பெருமாள்.'சார்ங்கம்' என்றால் தெய்வீக வில் என்றும், 'பாணி' என்றால் கையில் ஏந்தியவர் என்றும் பொருள். சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியபடி இருப்பதால் இவர் சார்ங்கபாணி ஆனார். நாளடைவில் 'சாரங்கபாணி' என்ற பெயரே பெருமாளுக்கு நிலைத்து விட்டது.