செவ்வாய் தோஷமா...
UPDATED : ஜன 16, 2025 | ADDED : ஜன 16, 2025
செவ்வாயால் உண்டாகும் எந்த தோஷமாக இருந்தாலும் முருகனை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யலாம். செய்ய இயலாதவர்கள் காலை, மாலையில் கந்த சஷ்டி கவசத்தை பாடவோ, கேட்கவோ செய்யலாம். இதை இயற்றிய தேவராய சுவாமிகள், 'கவசத்தை பாடினால் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்' என்கிறார். அதைப் போல கீழ்க்கண்ட கந்தரநுபூதிப்பாடலை விளக்கேற்றும் போது 3 முறை பாடுங்கள். நிச்சயம் முருகன் அருளால் எல்லா நன்மையும் உண்டாகும்.உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.