குடத்தில் லிங்கம்
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
எதை தொடங்கினாலும் விநாயகரை வணங்குவது மரபு. ஆனால் பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பெற்ற தேவர்கள், முதல் தெய்வமான விநாயகரை மறந்துவிட்டு அமிர்தத்தை பருகச் சென்றனர். விடுவாரா விநாயகர்... தன் திருவிளையாடலை தொடங்கினார். அமிர்தக் குடத்தை மறையச் செய்தார். இதை அறிந்த தேவர்கள் மன்னிப்பு கேட்டு குடத்தைப் பெற்றனர். பின் குடத்தை விநாயகர் முன் வைத்து வழிபட்டனர். குடம் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உண்டானது. இவரே 'அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயரில் திருக்கடையூரில் இருக்கிறார்.