தடை தகர்ப்பவர்
UPDATED : ஜன 30, 2025 | ADDED : ஜன 30, 2025
ஆறுபடை வீட்டில் இரண்டாவது தலம் திருச்செந்துார். குரு பரிகாரத் தலமான இங்கு முருகன் போருக்குச் செல்லும் முன், அசுரர்களை வெற்றி பெறுவது எப்படி என குருபகவான் மூலம் அறிந்து கொண்டார். விபரத்தை எடுத்து சொன்ன குருபகவான், அப்போது முருகனை வழிபடும் பாக்கியத்தை பெற்றார். அது முதல் இத்தலம் 'வியாழ க்ஷேத்திரம்' என பெயர் பெற்றது. “என் இதயத்தில் வாழ்பவனே! சீறிப்பாயும் அலைகடல், உன் சந்நிதியில் வலுவிழந்து கிடப்பது போல உன்னை வந்து தரிசிப்போரின் வாழ்வில் குறுக்கிடும் துன்பம் மறைந்தோடும் என அறிவித்தபடி இருக்கிறாய்” என முருகனின் பெருமையை சொல்கிறார் ஆதிசங்கரர். வியாழனன்று நீராடி இங்கு முருகனைத் தரிசிப்போருக்கு தடைகள் தகரும்.