உள்ளூர் செய்திகள்

சிரஞ்சீவி மந்திரம்

ராமனுக்கும், ராவணனுக்கும் 18 நாள் நடந்த போரில் ராவணன் கொல்லப்பட்டான். ராமன் வெற்றி பெற்ற செய்தியை சீதைக்கு தெரிவிக்க மூச்சிறைக்க ஓடி வந்தார் அனுமன். வாய் திறந்து பேச முடியாததால் அசோக வனத்தில் சீதையின் முன் கிடந்த மணலில் 'ஸ்ரீராமஜெயம்' என எழுதினார். இதை பார்த்த சீதை அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தாள். அன்று முதல் ராம பக்தர்களின் மகாமந்திரமாகி விட்டது இது. கோடிக்கணக்கில் 'ஸ்ரீராம ஜெயம்' எழுதியும் சொல்லியும் வருகின்றனர். சிரஞ்சீவியான அனுமனைப் போல அவர் எழுதிய மந்திரமும் இன்றும் வாழ்கிறது.