ஐந்து சபை
UPDATED : ஜூன் 27, 2025 | ADDED : ஜூன் 27, 2025
திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய தலங்களை நடராஜரின் பஞ்ச சபைகள் எனக் குறிப்பிடுவர். அவற்றை ரத்தின சபை, கனக சபை, ரஜத சபை (வெள்ளி), தாமிர சபை, சித்திர சபை என்றும் சொல்வர். இதில் சிறப்பு என்ன என்றால் சிதம்பரம் கோயிலிலேயே சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜசபை என்னும் சபைகள் உள்ளன.