உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு சின்னம்

 ஸ்ரீவில்லிபுத்துார் வடபெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார். 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர், “திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம்” என மேருமலை சிகரத்திற்கு இணையாக உள்ளது என பாடியுள்ளார். சுதை சிற்பங்கள் இல்லாமல் இக்கோபுரம் காட்சி தருகிறது. இதுவே தமிழக அரசின் சின்னமாக இடம் பெற்றுள்ளது.