உள்ளூர் செய்திகள்

சிங்கம் கர்ஜித்தது ஏன்

சத்திய லோகத்தில் ஒருநாள் பிரம்மா ஜபமாலையை உருட்டியபடி வேதம் ஜபித்தபடி இருந்தார். எதிரில் சரஸ்வதி வீணை இசைத்தபடி இருந்தாள். திடீரென சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதிர்ச்சி அடைந்த பிரம்மா கீழே விழுந்தார். அவர் எழுந்த போது துாணைப் பிளந்தபடி மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்த காட்சி கண்ணுக்குத் தெரிந்தது. இந்திரன், குபேரன், சந்திரன் போன்ற மற்ற தேவர்கள் எல்லாம் இடையூறு இல்லாமல் அவரவர் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரம்மாவிற்கு மட்டும் ஏன் இந்த நிலை ஏற்பட்டது? 'இனியாவது நல்லவர்களுக்கு வரம் தர வேண்டும். இரணியன் போன்ற கொடியவர்களுக்கு வரம் தரக் கூடாது' என்பதை கர்ஜனை மூலம் நரசிம்மர் உணர்த்தினார்.