உள்ளூர் செய்திகள்

மூன்று ரகசியம்

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் கொடுத்தார். அதனால் அவள் 'நாமகள்' எனப் பெயர் பெற்றாள். மனிதன் படித்ததன் அடையாளமாக நல்லதை மட்டுமே பேச வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஒருவரின் படைப்பாற்றல் நன்மைக்காக மட்டும் பயன்பட வேண்டும். திருமாலின் மார்பில் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி குடியிருக்கிறாள். பொருள் தேடுபவன் நல்ல மனம் படைத்தவனாக இருக்க வேண்டும். இரக்கத்துடன் மற்றவருக்கு உதவ வேண்டும் என்பதை மகாலட்சுமி உணர்த்துகிறாள். வீரம் என்பது உடல் முழுதும் பரவியிருக்க வேண்டும் என்பதற்காக வீரத்தை வழங்கும் பார்வதி சிவனின் தலை முதல் பாதம் வரை சரிபாதியாக (அர்த்தநாரி) இருக்கிறாள்.