உள்ளூர் செய்திகள்

ஆபத்து காலத்தில்...

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, '' ஏ!குரங்கே! இங்கு புதிதாக வந்திருக்கும் நீ யார்?'' எனக் கேட்டது. ''அழகாக இருக்கும் இந்த வனப்பகுதியை பார்க்க வந்தேன்'' என பொய் சொன்னார் அனுமன். இதே போல அனுமனுக்காக ஒரு முறை சீதையும் பொய் சொன்னாள். அசோக வனத்தை அனுமன் துவம்சம் செய்த போது, அரக்கிகள் அலறியடித்தபடி ஓடினர். அதில் ஒருத்தி சீதையிடம், '' இவன் யார்?'' எனக் கேட்டாள். சீதையோ, ''என்னை ஏன் கேட்கிறாய்? எனக்கு என்ன தெரியும்? என உண்மையை மறைத்தாள். ஆபத்து காலத்தில் பொய் சொல்வது தர்மம் என்பதால் இந்த பொய் குற்றம் ஆகாது.