மதனை எரித்த சிவன்
UPDATED : அக் 07, 2025 | ADDED : அக் 07, 2025
மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு சிவனுக்கு முன்புறம் நந்தி இருப்பதோடு, பின்புறமும் நந்தி உள்ளது. முனிவரான தீர்க்கவாகு வழிபட்ட தலம் இது. மூலவர் சிவன் மேற்கு நோக்கி இருக்கிறார். தீர்க்கவாகு என்பதற்கு 'நீண்ட கைகளைக் கொண்டவர்' என பொருள். சிவபெருமானுக்கு அபிேஷகம் செய்ய கங்கையை பெற கைகளை நீட்டிய போது அவை குறுகியதால் 'குறுக்கை' எனப் பெயர் வந்தது. தற்போது 'கொருக்கை' என்றாகி விட்டது. பிரகாரத்தில் தீர்க்கவாகு முனிவரின் சன்னதி உள்ளது. சிவன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த தலம் இது. மன்மதனின் சாம்பல் இங்கு படிந்ததால் கோயில் அருகில் விபூதி நிறத்தில் மணல் படிந்துள்ளது.