உள்ளூர் செய்திகள்

தரிசனமும் உரையாடலும்

பிரசாந்தி நிலையத்தில் ஒரு சாதாரண குடில் அமைப்பில் பகவான் சத்ய சாய்பாபா வாழ்ந்து வந்தார். அந்த அறை எட்டுக்கு பத்து அடி கொண்டது. நாளடைவில் பக்தர்களின் வேண்டுகோளுக்காக யஜூர் மந்திர் வளாகத்திற்கு மாறினார். ஆஸ்ரமத்தின் முக்கிய நிகழ்வு என்பது தினசரி பஜனையும், அவரின் தரிசனமும் தான். தரிசனத்தின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுடன் அவர் உரையாடுவார். அவர் ஸித்தி அடைந்த பிறகு பஜனை முடிந்ததும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை கடிதத்தில் எழுதி சமாதியின் முன் சமர்ப்பிக்கின்றனர்.