அசாம் அசுரன்
UPDATED : நவ 10, 2023 | ADDED : நவ 10, 2023
பிராக்ஜோதிஷபுரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் நரகாசுரன். இதுவே தற்போது அசாமின் தலைநகர் கவுகாத்தி. வராகமூர்த்திக்கும் (திருமாலின் அவதாரம்) பூமிதேவிக்கும் பிறந்த இவன் மக்களைக் கொடுமைப்படுத்தினான். திருமாலும், பூமிதேவியின் அம்சமான சத்தியபாமாவும் இவனை வதம் செய்தனர். அசுரன் இறந்த மகிழ்ச்சியில் மக்கள் வீடுகளில் வரிசையாக தீபமேற்றி கொண்டாடினர். தங்களைப் பிடித்த இருள் நீங்கியதாக உணர்ந்தனர். இந்நாளே 'தீபாவளி' எனப்பட்டது. இதற்கு 'விளக்குகளின் வரிசை' என்றும் பொருள் கூறுவர் பெரியோர்.