உள்ளூர் செய்திகள்

விளக்கேற்றும் போது...

ஒளி வடிவான கடவுளை தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேதம், புராணங்களில் விளக்கேற்றுவதே எல்லா மங்களங்களையும் தரும் என்கின்றன. இதனால்தான் பல அரசர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதை மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். அதிலும் கார்த்திகை மாதத்தில் கோயிலில் தீபம் ஏற்றுவதும், வீட்டில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் அவசியம். இப்படி விளக்கேற்றும் போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும். கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||இதற்கு பொருள் என்ன தெரியுமா... புழுக்களோ, பறவைகளோ என எந்த உயிரினம் ஆனாலும் சரி. மனிதர்களில் யாராக இருந்தாலும் சரி. இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகி, மற்றொரு பிறவி எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும். அதாவது ஓர் உயிர் மோட்சம் அடையட்டும் என்று பொருள். தீபத்தின் ஒளி வித்தியாசம் இல்லாமல் மனிதர்கள், புழு, பறவை, கொசு, மரம், நீர்வாழ் உயிரினங்கள் மீது படுகிறது. அதுபோல் நம் மனதில் இருந்தும் அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் அரவணைக்கும்படி பிரகாசிக்க வேண்டும்.