உள்ளூர் செய்திகள்

பிறவியின் பயன்

பல மொழிகளில் ராமாயணம் எழுதப்பெற்றாலும் அதிலுள்ள எல்லா பாடல்களிலும் நிறைந்து இருப்பது பக்திச் சுவை. அதனால்தான் அது காலம் என்னும் வெள்ளத்தில் கரையாமல் தித்திப்பை இன்னும் கொடுக்கிறது. 'மனதில் ராமபக்தி இல்லாமல் மானிடப்பிறவி எடுத்து என்ன பயன்' என்கிறார் தியாகராஜ சுவாமிகள். இலக்கிய உலகில்'ராமாயணம் பல சாதனை படைத்தாலும், அதன் இலக்கியச்சுவை சிறப்புடையது. 'கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ' என்பது ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் வாக்கு. ராமகாதையை ஒரு சுவை மிகுந்த பலாப்பழம் என்கிறார் நாமக்கல் ராமலிங்க கவிஞர். அப்பழத்தை முதலில் கொண்டு வந்தவர் வால்மீகி. அப்பழத்தை கீறிச்சுளை எடுத்து விருந்து படைத்தவர் கம்பர். அதிலும் அப்பழத்தில் ஆழ்வார்களால் வளர்க்கப்பட்ட ராமன் மீதுள்ள பக்தி வெள்ளம் பக்தர்களிடம் தேனாக ஊறியுள்ளது என்கிறார்கள் பிற்கால கவிஞர்கள்.