சப்த மாதர்களை சரணடைவோம்
UPDATED : பிப் 19, 2024 | ADDED : பிப் 19, 2024
* கோயில்களில் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் சப்தகன்னியர் சன்னதி இருக்கும். இவர்களை சப்த மாதர்கள் என்றும் குறிப்பிடுவர். * நம் உடம்பிலுள்ள சப்த தாதுக்களுக்கு இவர்களே அதிதேவதைகள். பிராமி - தோல், மகேஸ்வரி - நிணம்,(கொழுப்பு), கவுமாரி - ரத்தம், வைஷ்ணவி - சீழ், வாராகி - எலும்பு, இந்திராணி - தசை, சாமுண்டி - நரம்புக்கும் உரியவர்களாவர். * இவர்களை வழிபட்டால் தீயகுணங்கள் அனைத்தும் நீங்கும். பிராமி - காமம், மகேஸ்வரி - கோபம், வைஷ்ணவி - பேராசை, கவுமாரி - மாயை(நிலையாமை), இந்திராணி - குற்றம் காணல், சாமுண்டி - புறம் பேசுதல் வாராகி - பொறாமையை போக்கி நம்மை காக்கின்றனர். மனதில் மறைந்துள்ள தீயகுணங்கள் ஏழையும் போக்கினால் தட்சிணாமூர்த்தி போல நாமும் அமைதியுடன் வாழலாம்.