உள்ளூர் செய்திகள்

கெட்டி மேளத்திற்கு...

ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களால் சிலருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போகும். இவர்கள் முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் பாடிய கீழ்க்கண்ட திருப்புகழ் பாடலை தொடர்ந்து 48 நாட்கள் காலை அல்லது மாலையில் 6 முறை பாட வேண்டும். முருகனின் அருளால் விரைவில் வீட்டில் கெட்டி மேளம் கேட்கட்டும். இதோ அந்தப் பாடல்...விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்தமிகவானில் இந்து... வெயில்காயமிதவாடை வந்து தழல் போல ஒன்றவினைமாதர் தம்தம்... வசைகூறகுறவாணர் குன்றில் உறைபேதை கொண்டகொடிது ஆன துன்ப... மயல் தீரகுளிர்மாலையின் கண் அணிமாலை தந்துகுறைதீர வந்து... குறுகாயோ?மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்துவழிபாடு தந்த... மதியாளா!மலைமாவு சிந்த அலைவேலை அஞ்சவடிவேல் எறிந்த... அதிதீராஅறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும்அடியார் இடைஞ்சல்... களைவோனேஅழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்துஅலைவாய் உகந்த பெருமாளே.