நீண்ட ஆயுளுக்கு...
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
ஆத்மகாரகர் எனப்படும் சூரியன் மீன ராசியிலும், மனோகாரகர் எனப்படும் சந்திரன் கன்னி ராசியிலும் பங்குனி மாதத்தில் இருப்பர். இருவரும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்க்கும் பங்குனி உத்திர நாளில் விரதமிருந்தால் மனம், உடலால் செய்த பாவங்கள் விலகும். நீண்ட ஆயுள், உடல்நலம் பெருகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திர விரதம் இருப்பவருக்கு அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு மோட்சம் அடையலாம்.