ஏரிக்கரையினிலே...
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
பெங்களூரு அருகிலுள்ள அல்சூர் ஏரிக்கரையில் ஒடுக்கத்துார் சுவாமிகள் சமாதி கோயில் உள்ளது. இங்கு தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். உலோகைய நாயுடு, பாலாம்பிகை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சேஷையா. இல்லறத்தில் நாட்டமில்லாத இவர் ஒடுக்கத்துார் காட்டில் தவத்தில் ஈடுபட்டு அஷ்டமாசித்திகளைப் பெற்றார். நோயாளிகளைக் குணப்படுத்தி அற்புதம் நிகழ்த்தினார். மக்கள் குருநாதராக ஏற்று சுவாமிகளைப் பின்பற்றினர். 1915 தை மாதம் சுவாதியன்று சமாதியில் ஆழ்ந்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் தை சுவாதியன்று குருபூஜை நடக்கிறது. சுவாமிகள் தவம் புரிந்த அரசமரத்தடியில் அஷ்ட நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஓசூர் - மடிவாலா சாலையில் 18 கி.மீ., அங்கிருந்து 13 கி.மீ., துாரத்தில் கோயில் உள்ளது.