யோக ஜாதகம்
UPDATED : மார் 31, 2024 | ADDED : மார் 31, 2024
மனிதனாக வாழ்ந்து உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டிய மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமாவதாரம். இவர் அயோத்தியில் பிறந்த போது வானில் சூரியன், சுக்கிரன், குரு, சனி, செவ்வாய் என ஐந்து கிரகங்களும் உச்ச பலத்தில் இருந்தன. இதை 'பஞ்ச மகா புருஷ யோகம்' என்பர். இந்த ஜாதகத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் கிரக தோஷம் விலகும். தினமும் காலை அல்லது மாலையில் 108 முறை 'ஸ்ரீராமஜெயம்' எழுதி விட்டு ராமரின் ஜாதகத்தை வழிபட்டால் கல்வி, வேலை வாய்ப்பு, திருமண யோகம், குழந்தைப்பேறு, மனநிம்மதி கிடைக்கும்.