உள்ளூர் செய்திகள்

மகாவிஷ்ணுவின் மாமனார்

மகாவிஷ்ணுவின் அடியவர் பெரியாழ்வார். ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதரித்தார். இவரது இயற்பெயர் விஷ்ணு சித்தர். ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி பெருமாளுக்கு பூமாலை சாற்றுவது அவரது கடமை. ஆண்டாளின் வளர்ப்பு தந்தையான இவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆண்டாளை திருமணம் செய்து கொடுத்தார். ஆதலால் இவர் மகாவிஷ்ணுவின் மாமனார் ஆனார்.