காக்கும் கவசம்
UPDATED : மே 10, 2024 | ADDED : மே 10, 2024
எப்போதும் நமது பையில் மஞ்சள்,குங்குமம், திருநீறு வைத்திருக்க வேண்டும். இந்த புனித பொருட்கள் நம்மைக் காக்கும் கவசமாகும். இதனால் என்ன பயன் என்று நினைக்கிறீர்களா... நம்மை சந்திக்கும் சிறியவர்களுக்கு கடவுளின் நாமத்தைச் சொல்லி திருநீறு, குங்குமம் வைத்து வாழ்த்தலாம். அதைப் போல் பெரியோர்களை சந்தித்தால் சாஷ்டாங்கமாக வணங்கி அவர்களிடம் இருந்து திருநீறு பெறலாம்.