உள்ளூர் செய்திகள்

திருப்பம் உருவாக...

விருப்பம் போல வாழ்வு அமையவே நாம் விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் எண்ணமும், வாழ்வும் ஒன்றாக இருப்பதில்லை. அதனால் கிடைத்ததை கொண்டு சமாதானத்துடனோ அல்லது ஏக்கத்துடனோ வாழ்வு நகர்கிறது. நல்ல திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் நாம் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம். இந்நிலையில் நமக்கு கை கொடுத்து உதவுபவராக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். 12 வாரம் சனிக்கிழமையன்று விரதமிருந்து வீட்டிலும், பெருமாள் கோயிலிலும் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் திருப்பம் உருவாகும்.