உள்ளூர் செய்திகள்

அழகெல்லாம் முருகனே...

முருகன் என்ற சொல்லுக்கு 'அழகு' என பொருள். இப்பெயர் எப்படி வந்தது தெரியுமா... நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை தரிசித்து மகிழ்ந்தான் ஆதிமனிதன். இளஞ்சூரியன் பார்ப்பதற்கு செக்கச் செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலநிறத்தில் இருக்கும். இந்த அழகுக் காட்சியைக் கண்டு 'முருகு' எனச் சொல்லி மகிழ்ந்தனர். இதனடிப்படையில் சிவப்பு நிறம் கொண்ட முருகப்பெருமானுக்கு நீலநிறம் கொண்ட மயில் வாகனமாக அமைந்தது. இதனால் 'சேயோன், செவ்வேல்' என அவர் பெயர் பெற்றார். சூரியன் மட்டுமின்றி மலை, காடு, அருவி என இயற்கையின் அழகை எல்லாம் முருகனாக கருதி வழிபட்டனர். அதையே 'அழகெல்லாம் முருகன்' என்கிறோம்.