உள்ளூர் செய்திகள்

கோபம் கொள்

தீய குணங்களில் கொடியது கோபம். இந்தக் குணம் யாரிடமும் இருக்கக்கூடாது. ஆனால் இதை புகழ்கிறது ரிக்வேதம். கோபத்தையே ஒரு தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இதில் உள்ளன. முதல் சூக்தத்தில், ' மிகுந்த பலசாலியான கோபமே. இங்கு வருவாயாக. நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே. எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும்' என்கிறது. மற்றொன்று ' தீயைப் போல ஜொலிக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்கள் எதிரிகளை வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக' என கோபத்தைப் புகழ்கிறது. நல்ல விஷயத்திற்காக கோபப்படுவதில் தவறில்லை. இதையே மகாகவி பாரதியாரும் 'ரெளத்திரம் பழகு' எனச் சொல்லியிருக்கிறார்.