நிலையானவன் மைப்பொலியும் கண்ணிகேள்!
UPDATED : ஜூன் 21, 2024 | ADDED : ஜூன் 21, 2024
மால் அயனோடு இந்திரனும்எப்பிறவியும் தேட என்னையும் தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்துமெய்ப் பொருள்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்எப்பொருட்கும் தானேஆய் யாவைக்கும் வீடாரும்அப்பொருளாம் நம் சிவனைப் பாடுதும்காண் அம்மானாய்! மை தீட்டிய பெண்ணே! நான் சொல்வதைக்கேள். பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் சிவபெருமானையே அடைக்கலமாக கொண்டிருக்கிறார்கள். தகுதியில்லாத என்னையும் ஒரு பொருளாக மதித்து, பிறவிப்பிணியில் இருந்து அப்பெருமான் காப்பாற்றினான். அவன் என்றும் நிலையானவன். உலகப்பொருட்கள் அனைத்தையும் ஆக்குபவன், ஒடுக்குபவன், முக்தியருள்பவன். அந்த சிவனைப் பாடி அம்மானை ஆடுவோம் என்கிறார் சிவனடியாரான மாணிக்கவாசகர்.