சோழநாட்டின் இன்னொரு பெயர்
UPDATED : ஆக 10, 2012 | ADDED : ஆக 10, 2012
அகத்தியர் மூலமாக காவிரி, கர்நாடகத்தில் உள்ள குடகு மலையில் உற்பத்தியானது. அதை சோழராஜா ஒருவர் கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் என விரிவுபடுத்தி நீட்டித்து வந்தார். அதை மேலும் நீட்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூரில் வசித்த ஹேரண்டக மகரிஷி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அது காவிரிபூம்பட்டினம் வரை வந்தது. மணிமேகலையில் உள்ள தகவலின்படி, அகத்தியரிடம் வரம்பெற்ற சோழராஜா, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியை கொண்டு வந்தார் என உள்ளது. செய்யுள் ஒன்றில், சோழநாட்டை 'சம்பாபதி' எனக் குறிப்பிட்டுள்ளனர். காவிரி சோழராஜ்யத்துக்கு வருவதற்கு முன்னால் அந்நாட்டின் பெயர் சம்பாபதி என்று இருந்துள்ளது. சம்பாபதி என்றால் 'காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) என்று சொல்பவர்களும் உண்டு.