உள்ளூர் செய்திகள்

பெண்கள், சேவை நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

பால் கொடுக்கும் காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு உணவு அளிப்பர். வயதாகி பால் வற்றிய பின் உணவு அளிக்காமல் விட்டு விடுவது பாவம். பசு வளர்ப்போர் பராமரிக்க முடியாத நிலையில், சேவை நிறுவனங்களில் வயதான பசுக்களை ஒப்படைக்கலாம். அவற்றுக்கான உணவை பெண்கள் மனம் வைத்தால் தினமும் கொடுக்க முடியும். சமைக்கும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளை எடுத்து வைக்க, வீடு வீடாக சேகரிக்கும் பணியில் சேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும். இதன் மூலம் கிருஷ்ணரின் அருள் கிடைக்கும் என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.