வில்வமாலை தத்துவம்!
UPDATED : பிப் 05, 2013 | ADDED : பிப் 05, 2013
சிவபெருமானுக்கு வில்வமாலை மிகவும் உகந்தது. இதை அவர் அணிவதற்கு ஒரு காரணம் உண்டு. மனிதன் நிமிர்ந்து நிற்கக்காரணம் முதுகுத்தண்டு. வில்வ மரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மைஉடையது. இதன்மூலம் சிவனை வழிபாடு செய்பவர்கள் எதற்கும் அஞ்சாமல், ''நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்'' என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது ஐதீகம். மேலும், வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் 3 இலைகள் இருக்கும். அது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.