மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு...
UPDATED : மார் 18, 2021 | ADDED : மார் 18, 2021
அஷ்டாவக்கிரன் (அஷ்டம் - எட்டு, வக்கிரன்- கோணலானவன்) என்னும் சிறுவன் வேதங்களை நன்றாகக் கற்று புலமை பெற்றிருந்தான். இவன் சிறந்த சிவபக்தன். தாயின் கருவில் இருந்த போதே தன் தாத்தா உபதேசித்த வேதங்களை கற்றதோடு, தன் தந்தை கஹோனகர், வேத மந்திரங்களை தவறுதலாக படிப்பதை கேட்டு சகிக்க முடியாமல் உடலை முறுக்கி கொண்டவன். இதனால் அவன் பிறக்கும் போதே முதுகில் கூன் விழுந்து கை, கால்கள் திரும்பிய நிலையில் இருந்தான். இவன் சிவபெருமானை வழிபட்டதன் பயனாக கூன் நிமிரப் பெற்றான். இந்த அதிசயம் நிகழ்ந்த தலம் தஞ்சாவூர் மாவட்டம், கூனஞ்சேரி கைலாசநாதர் கோயில். சுவாமிமலை-திருவைகாவூர் சாலையில் 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளது. மனநிம்மதி, தன்னம்பிக்கை பெற மாற்றுத்திறனாளிகள் இங்கு வழிபடுகின்றனர்.