பவனி வரும் யானைப்பட்டாளம்
UPDATED : செப் 02, 2011 | ADDED : செப் 02, 2011
தெருவில் ஒரு யானை வந்தாலே குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பர். கேரளாவில் ஓணத்திருவிழாவில் யானைப்பட்டாளத்தையே கண்டு ரசிக்கலாம். அவற்றின் நெற்றியை தங்கத்தட்டினால் ஆன முகப்படாம் அழகு செய்யும். பாரம்பரியம் மிக்க பட்டாடைகள், ஒயிட் மெட்டல் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட குடைகள் வைக்கப்படும். பட்டுக்கயிறு, பிரத்யேக அணிகலன்கள், உடலில் வரையப்பட்டிருக்கும் டிசைன் என்று யானைகள் அணிவகுத்துச் செல்வது தனியழகு. இங்கு நடக்கும் மரத்தொழிலுக்கு யானைகள் மிகவும் உதவுகின்றன. மேலும், இவை விநாயகரின் அம்சம் என்பதால் தெய்வீகமானவை. எனவே, அவற்றிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் ஊர்வலம் நடத்துகின்றனர்.