வரவு செலவு பெருமாள்
UPDATED : செப் 30, 2020 | ADDED : செப் 30, 2020
வெங்கடாஜலபதி, மலையப்பர், உக்ர சீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர் என திருப்பதி பெருமாள் 'பஞ்ச பேரராக' காட்சியளிக்கிறார். மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி இருக்கிறார்.திருவிழாக்களில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா வருபவர் மலையப்பர். இவருக்கே தினமும் திருக்கல்யாணம் நடக்கும். இவரை மலைக்கினிய பெருமாள் என்றும் அழைப்பர். உக்ர சீனிவாசர் கார்த்திகை மாதம் துவாதசியன்று மட்டும் அதிகாலையில் உலா வருவார். மற்ற நாளில் இவரை தரிசிக்க முடியாது. வெள்ளியால் செய்யப்பட்ட போக சீனிவாசருக்கு அபிஷேகம் நடக்கும். இவரே இரவு பள்ளியறை பூஜைக்கு செல்பவர்.கொலுவு சீனிவாசர் என்பவரிடம் கோயிலின் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிப்பர்.