கோகுலத்தில் கொண்டாட்டம்
UPDATED : ஆக 19, 2011 | ADDED : ஆக 19, 2011
கோகுலத்தின் தலைவரான நந்தகோபன், தங்கள் இல்லத்துக்கு வந்த குட்டிக்கண்ணனைக் கொஞ்சி மகிழ்ந்தார். ஆயர்களுக்குப் பொன்னும் பொருளும் தானம் தந்தார். இக்காட்சியை பெரியாழ்வார் பாசுரத்தில் சொல்லும் அழகு கவித்துவமானது. அவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு நந்தகோபன் இல்லம் தேடி ஓடிவந்தனர். கால் தடுமாறி அங்குமிங்கும் கீழே விழுந்து எழுந்தனர். மகிழ்ச்சிப்பெருக்கில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நின்றனர். எதிரும் புதிருமாக இருவர் சந்தித்தவுடன், 'நம்பி எங்கிருக்கிறான்! என் அப்பன் நாரணன் எங்கிருக்கிறான்!'' என்று விசாரித்து குதூகலித்தனர். இசைக்கருவிகளைக் கொட்டியும் முழக்கியும் ஆட்டமும் பாட்டமுமாக ஆய்ப்பாடியை வலம் வந்தனர். இப்படி ஆய்ப்பாடியே கண்ணன் பிறந்தநாளில் மகிழ்ச்சியில் திளைத்தது.