உள்ளூர் செய்திகள்

நாழிகை மணி

கோயில்களில் பூஜையின்போது மணி அடிப்பது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேரத்தைக் குறிக்கும் விதமாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி அடிக்கின்றனர். 24 மணி நேரமும் இம்மணி ஒலிக்கப்படும். நேரத்தை குறிக்கும் விதமாக அடிக்கப்படும் மணி என்பதால் இதற்கு, 'நாழிகை மணி' என்று பெயர். திருவாரூர் தவிர, அனைத்து கோயில்களில் உள்ள சிவலிங்கங்களும் சிதம்பரத்தில் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது இங்கு ஒடுங்குவதாக ஐதீகம். இரவு 10 மணிக்கு நடராஜர் சன்னதியில் இந்த பூஜை நடக்கும். நாழிகை மணி ஒலித்த பிறகே இந்த பூஜையை நடத்துவர்.