மேகம்...வேகம்..
UPDATED : ஜூலை 08, 2011 | ADDED : ஜூலை 08, 2011
வாயுவேகம், மனோவேகம் என்றெல்லாம் அக்காலத்தில் வேகத்தைச் சொல்வதுண்டு. சூறாவளிக் காற்று வேகமாக வீசுவதால் வாயுவேகம் என்பர். நினைத்தவுடன் மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியது என்பதால் மனோவேகம் என்பர். அதையும்விட, வேகமாக கஜேந்திரனை முதலையிடம் இருந்து காப்பதற்காக வைகுண்டத்தில் இருந்து ஓடிவந்தார் பெருமாள். என்ன வேகத்தில் பெருமாள் கருடவாகனத்தில் வந்து சேர்ந்தார் என்பதை வேதாந்ததேசிகர் ஆராய்ச்சி செய்தார். பக்தனுக்கு துன்பம் நேர்ந்து விடக்கூடாது என்னும் கருணையால் பெருமாள் ஓடிவந்தார். அதனால் அவர் வந்த வேகம் 'காருண்யவேகம்' என்று வேதாந்ததேசிகர் குறிப்பிடுகிறார். மழை பெய்யும் போது கூடியிருக்கும் கருமேகம் போல நீலவண்ணம் கொண்டவர் பெருமாள். அந்த மழை மேகம் போல, கருணையைக் கொட்டிக் கொண்டு வருவதால் அந்த வேகத்தை 'காருண்யவேகம்' என்பது சரிதானே!