உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு குறை வைக்காதீங்க!

வழிபாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சிவனுக்கு அபிஷேகம், விஷ்ணுவுக்கு அலங்காரம். விநாயகருக்கு நைவேத்யம். விநாயகர் குழந்தைக் கடவுள் என்பதால், பலவிதமான பலகாரங்களைப் படைத்து வழிபடுவது சிறப்பு. அவ்வைப்பாட்டி 'பால்,தெளிந்த தேன், சர்க்கரைப்பாகு, பருப்பு' என்று விநாயகருக்கு தான் தந்ததை பட்டியலிடுகிறார். அருணகிரிநாதர் திருப்புகழில், 'கைத்தல நிறைகனி, அப்பம், அவல், பொரி' என விநாயகருக்கு விருப்பமானதை எல்லாம் அடுக்குகிறார். விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், அப்பம், தேங்காய், பழவகைகள், அவல், பொரி என குறைவில்லாமல் படைத்து, பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத்தால் விநாயகர் நிறைவான வாழ்வு தருவார்.