உள்ளூர் செய்திகள்

காலடியில் கல்வி யாகம்

ஆதிசங்கரரின் குலதெய்வமான காலடி கிருஷ்ணர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு வரும் செப். 28 முதல் அக். 6 வரை கல்வி முன்னேற்றம் தரும் ஸ்ரீவித்யா ராஜகோபால யாகம் நடக்கிறது. கேரளாவிலுள்ள இந்தக் கோயிலில் வேதவிற்பன்னர்கள் இந்த யாகத்தை நடத்துகின்றனர். யாகத்தின் போது 10008 முறை வித்யா ராஜகோபால மந்திரம் ஜெபிக்கப்படும். இந்த யாகத்தைக் காண்பவர்கள் நினைவாற்றல் பெறுவதோடு, கல்வியிலும் முன்னேறுவர் என்பது நம்பிக்கை. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோரும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 093888 62321.