மயக்கும் மாலைப்பொழுது
UPDATED : ஜூலை 19, 2022 | ADDED : ஜூலை 19, 2022
ஒரு ஆண்டை அயனம் என்னும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் சொல்லப்படும். உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாகும். தட்சிணாயன காலம் தேவர்களின் இரவுப் பொழுது. பூலோகத்தில் ஓராண்டு காலம் என்பது வானுலக தேவர்களின் ஒரு நாள். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர தொடக்கமாக உள்ளது. பகல் முடிந்தும், இருள் சூழும் மாலையில் மயக்கம் உண்டாகி விடும். அதிலிருந்து உலகை காக்கும்படி அன்னை பராசக்தியை வழிபாடு செய்வது அவசியம்.