தண்ணீரில் கங்கை
UPDATED : நவ 12, 2012 | ADDED : நவ 12, 2012
தீபாவளியன்று நாம் குளிக்கும் நீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இதனால் தான் தீபாவளி குளியலை 'கங்கா ஸ்நானம்' என்று சொல்கிறார்கள். முற்றும் துறந்த துறவிகளுக்கும் கூட அன்று எண்ணெய் குளியல் உண்டு. கங்கா ஸ்நானத்தால் நம் பாவங்கள் முழுமையாகத் தொலைகின்றன.