வழித்துணை விநாயகர்
UPDATED : ஆக 26, 2011 | ADDED : ஆக 26, 2011
மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரோட்டில், சாத்தூருக்கும் கோவில்பட்டிக்கும் நடுவில் ஓடைப்பட்டி கிராமம் <உள்ளது. இங்குள்ள வழித்துணை விநாயகர் கோயிலில், வாகனங்களை நிறுத்தி வணங்கிச் செல்கின்றனர். தாங்கள் செல்லும் நோக்கம் நிறைவேறவும், செல்லும் வழியில் தடையின்றி நலமாய் ஊர் சென்று அடையவும் இப் பிள்ளையாரை வேண்டுகின்றனர்.